< Back
மாநில செய்திகள்
கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது வழக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
3 March 2023 12:15 AM IST

பள்ளிபாளையத்தில் கட்சி நிர்வாகிய தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகியாக உள்ளார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு குமார் பள்ளிபாளையம் மாதேஸ்வரன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் குமாரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த குமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், கார்த்தி மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றார்.

மேலும் செய்திகள்