தஞ்சாவூர்
5 பேர் மீது வழக்கு
|கபிஸ்தலத்தில் மதுவிற்ற பெண் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கபிஸ்தலத்தில் மதுவிற்ற பெண் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரோந்து பணி
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் கபிஸ்தலம் போலீஸ் சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. ரோந்து பணியின் போது அந்த பகுதியில் நின்ற சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
5 பேர் மீது வழக்கு
விசாரணையில் அவர்கள் கபிஸ்தலம் பாலக்கரையை சேர்ந்த நடராஜன் மகன் திவான் பாபு (வயது 30), நரசிம்மபுரத்தை சேர்ந்த செல்வி(55), கபிஸ்தலம் காமராஜர் காலனியை சேர்ந்த ரமேஷ் (49), கபிஸ்தலம் அக்கரைப்பூண்டியை சேர்ந்த ஜெய்கணேஷ் (44), மணலூரை சேர்ந்த சூசைராஜ் (45) ஆகியோர் என்பதும், அனுமதியின்றி மதுவிற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.