கன்னியாகுமரி
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
|டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் (வயது 32). இவர் வடசேரியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று புதுக்குடியிருப்பை சேர்ந்த ராஜன் என்ற கட்டை ராஜன் (35) என்பவர் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்தி விட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ராஜனை பாரை விட்டு வெளியேறும்படி சக்தி மணிகண்டன் கூறினார். இதில் ஆத்திரமடைந்த ராஜனும், அவருடைய நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து இரவு பணி முடிந்து வடசேரி பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த சக்தி மணிகண்டனை தடுத்து நிறுத்தி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினா். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி வடசேரி போலீஸ் நிலையத்தில் சக்தி மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் ராஜன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--