< Back
மாநில செய்திகள்
காம்பவுண்டு சுவர் இடிப்பு; 30 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

காம்பவுண்டு சுவர் இடிப்பு; 30 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

தினத்தந்தி
|
29 Oct 2022 1:31 AM IST

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே காம்பவுண்டு சுவர் இடித்த சம்பவத்தில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 4 ஆயிரத்து 708 சதுர அடி நிலத்தை ஓசூரை சேர்ந்த ராமச்சந்திரன் கடந்த 2017-ம் ஆண்டு வாங்கினார். அவர் வாங்கிய இடத்தில், பொதுமக்கள் சாமி சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். இந்த நிலத்தில் பிரச்சினை இருந்த நிலையில சென்னை ஐகோர்ட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி ராமச்சந்திரனுக்கு நிலத்தை வழங்க உத்தரவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த இடத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி இருந்ததாக தெரிகிறது. இதனை சிலர் இடித்து அகற்றி உள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கட்டிகானப்பள்ளி ராமச்சந்திரன், கீழ்புதூர் முருகன், ராகவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்