< Back
மாநில செய்திகள்
கொத்தனாரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கரூர்
மாநில செய்திகள்

கொத்தனாரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
27 Sept 2023 1:11 AM IST

கொத்தனாரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தோகைமலை அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 25), கொத்தனார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி முருகேசனின் உறவினரான அதேபகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் இடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு வந்த முருகேசனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, உறவினர்கள் இருதரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகேசன், பழனிச்சாமி என்பவருடன் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வடிவேல் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த தமிழ்செல்வன், கார்த்தி ஆகியோர் முருகேசன் மற்றும் பழனிச்சாமியை மரக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த 2 பேரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் வடிவேல், தமிழ்செல்வன், கார்த்தி ஆகியோர் மீது தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்