தேனி
பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
|கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா பாண்டியன் (வயது 35). இவரது மனைவி பவித்ரா. அவருடைய சொந்த ஊர் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள விசுவாசபுரம் ஆகும். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் விவாகரத்து பெறுவதாக முடிவு செய்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ஆதித்யா பாண்டியன், பவித்ராவுக்கு ரூ.12 லட்சம் மற்றும் 10 பவுன் நகை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை பெற்று கொண்டு பவித்ரா கோர்ட்டில் விவாகரத்து தர மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஆதித்யா பாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள் பவித்ராவின் வீட்டுக்கு சென்று கேட்டனர். அப்போது பவித்ரா மற்றும் அவரது தந்தை லட்சுமணன், சகோதரி பஞ்சவர்ணம் ஆகியோர் சேர்ந்து ஆதித்யா பாண்டியனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆதித்யா பாண்டியன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பவித்ரா உள்பட 3 பேர் மீது போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.