< Back
மாநில செய்திகள்
குட்கா விற்ற பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு
நாமக்கல்
மாநில செய்திகள்

குட்கா விற்ற பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியில் மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எருமப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று மளிகைக்கடையில் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மளிகை கடை உரிமையாளர் முட்டாஞ்செட்டி காட்டுகொட்டாயை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன் (வயது 34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் செல்லிபாளையத்தில் உள்ள ஆனந்த் மனைவி பிரியா (32) என்பவர் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்