< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மினிலாரியில் கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் மீது வழக்கு
|13 Oct 2023 3:16 AM IST
கேரளாவில் இருந்து மினிலாரியில் கழிவுகள் ஏற்றி வந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நாங்குநேரி:
நாங்குநேரியை அடுத்த குறிஞ்சிநகர் அருகே நேற்று முன்தினம் இரவு கழிவுகள் ஏற்றிக்கொண்டு மினிலாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று அந்த மினிலாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் கேரளாவில் இருந்து உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மினிலாரி டிரைவர் கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஷாஜி (வயது 27), மறுகால்குறிச்சியைச் சேர்ந்த உடையார் (59) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கழிவு பொருட்களை ஆலைக்கு கொண்டு சென்று அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.