< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு
|20 Oct 2023 4:45 AM IST
போடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி அருகே முந்தல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கார் மோதி பா.ஜ.க. பிரமுகர் பிரஜேஷ் பலியானார். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் முந்தல் பகுதியை சேர்ந்த பொம்மையன், பெரியசாமி, பவுன்ராஜ், மாரி உள்பட 10 பேர் மீது குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.