< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்கு
|10 Sept 2023 6:00 AM IST
அனுமதியின்றி பேனர் வைத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கம்பம், போடி நகரில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை செய்தார். அவரை வரவேற்று நகரில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. கம்பத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 5 பேர் மீதும், போடியில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக பா.ஜ.க. நிர்வாகிகள் 5 பேர் மீதும் என மொத்தம் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் கம்பம் தெற்கு, போடி நகர் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.