< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு
|30 Jun 2023 12:30 AM IST
அரூர் போலீசார் ஈச்சம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தை அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது 4 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் சூதாட பயன்படுத்திய பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர். பாஸ்கர், தருமன், அருள், அனில் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.