< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூர் அருகேகற்கள் கடத்திய டிராக்டர், லாரி பறிமுதல்2 பேர் மீது வழக்கு
|30 April 2023 12:30 AM IST
அரூர்:
அரூர் அருகே உள்ள மு.தாதம்பட்டி பகுதியில் சிலர் அரசு அனுமதியின்றி கற்களை வெட்டி கடத்துவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக தாசில்தார் பெருமாள் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் மற்றும் லாரியை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வாகனங்களில் உடை கற்கள் மற்றும் சக்கை கற்களை வெட்டி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரூர் பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் (வயது 45), லாரி டிரைவர் இளையராஜா (26) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.