< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூர் அருகேசட்டக்கல்லூரி மாணவியிடம் தகராறு; வாலிபர்கள் மீது வழக்கு
|1 April 2023 12:30 AM IST
அரூர்:
அரூர் அருகே உள்ள கம்மாலப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி சேலம் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி நேற்று முன்தினம் பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டுக்கு சென்று தனது தாயிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர்களிடம் கேட்டுள்ளார். அப்போது வாலிபர்கள் அவரை தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தானூர் கிராமத்தை சேர்ந்த 7 பேரை தேடி வருகின்றனர்.