< Back
மாநில செய்திகள்
சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
28 Sept 2022 10:50 PM IST

இறந்தவர் உயிருடன் இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நில மோசடி செய்ததாக ராமநாதபுரம் சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.


இறந்தவர் உயிருடன் இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நில மோசடி செய்ததாக ராமநாதபுரம் சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஆள்மாறாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சிறுவயல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் பாண்டி (வயது71), இவரின் தந்தை கருப்பையாவிற்கு பூர்வீக பாத்தியப்பட்ட 35.96 ஏக்கர் நிலம் சிறுவயல் கிராமத்தில் உள்ளது. கடந்த 1989-ம் ஆண்டு கருப்பையா இறந்தநிலையில் அவரின் வாரிசுகளான பாண்டி தரப்பினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில் மஞ்சக்குளம் சுப்பிரமணி மகன் பழனி, காரேந்தல் முத்துக்கிருஷ்ணன் மகன் காளீஸ்வரன், மதுரை கிருஷ்ணமூர்த்தி மகன் நமச்சிவாயம், காரேந்தல் ராமு மகன் தங்கவேலு, ராமநாதபுரம் பத்திர எழுத்தர், சார்பதிவாளர் ஆகியோர் கூட்டு சேர்ந்து இறந்துபோன கருப்பையா உயிருடன் இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான நபரை வைத்து மேற்கண்ட நமச்சிவாயம் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.

புகார்

இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். தங்களின் தந்தை பெயரில் உள்ள தங்களின் சொத்தினை மோசடி செய்து உள்ளதை அறிந்த பாண்டி இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் நிலமோசடி பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கண்டவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்