< Back
மாநில செய்திகள்
சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டமேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
சேலம்
மாநில செய்திகள்

சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டமேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

தினத்தந்தி
|
21 Aug 2023 1:53 AM IST

சேலம்

சான்றிதழ் தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மேச்சேரி இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடன் வாங்க முடிவு

சேலம் மாவட்டம் மேச்சேரி அரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு சொந்தமான நிலப்பத்திரங்களை வங்கியில் வைத்து கடன் வாங்க முடிவு செய்திருந்தார். இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேச்சேரியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் பத்திரங்களை நகல் எடுத்துக்கொண்டு அவர் வீடு திரும்பினார். அப்போது, அவர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

இதனால் அங்குள்ள கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் நிலப்பத்திரங்கள் வைத்திருந்த பையை காணவில்லை.

வழக்குப்பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபு இதுகுறித்து மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்தி நிலப்பத்திரம் காணவில்லை என்று சான்றிதழ் தருவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ்காரர் மனோஜ் விஜயன் ஆகியோர் பிரபுவிடம் லஞ்சம் கேட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்