< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கார்கள் மோதல்; 5 பேர் காயம்
|14 March 2023 12:15 AM IST
கார்கள் மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்
எஸ்.புதூர்,
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சீனிவாசராவ்(வயது 54). இவர் ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டார். இவரது கார். மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலம் அருகே வந்த போது, பின்னால் வந்த மற்றொரு கார், இவரது காரில் மோதியது. இந்த விபத்தில் பின்னால் காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த ஜாபர்அலி(45), அவரது மனைவி மரியம், மகள் அதியா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவரது மகன் முகமது தானிஷ் படுகாயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னால் சென்ற காரில் இருந்த சீனிவாசராவும் லேசான காயம் அடைந்தார். இது குறித்து புழுதிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.