< Back
மாநில செய்திகள்
கார்கள் மோதல்; 3 பேர் காயம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கார்கள் மோதல்; 3 பேர் காயம்

தினத்தந்தி
|
19 Jun 2023 12:18 AM IST

கார்கள் மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

நாங்குநேரி:

நெல்லை அருகே மூன்றடைப்பு பெட்ரோல் பங்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை நோக்கி சென்ற அடுத்தடுத்து 2 கார்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது, எதிர்பாராவிதமாக 2 கார்களும் மோதிக் கொண்டன. இதில் பின்னால் வந்த கார் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நீலகண்டன் (வயது 32), வள்ளியூர் தெற்குத் தெருவை சேர்ந்த பிரபாகர் (27), மற்றும் முன்னால் சென்ற காரில் இருந்த சிங்கநேரியைச் சேர்ந்த வேலாயுதம் (52) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்