சிவகங்கை
திருப்பத்தூர் அருகே முட்புதரில் தச்சுத்தொழிலாளி பிணம்- போலீசார் விசாரணை
|திருப்பத்தூர் அருகே சாலை ஓரத்தில் முட்புதர்களுக்குள் தச்சுத்தொழிலாளி பிணம் கிடந்தது. இது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே சாலை ஓரத்தில் முட்புதர்களுக்குள் தச்சுத்தொழிலாளி பிணம் கிடந்தது. இது சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தச்சுத்தொழிலாளி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் இருந்து பட்டமங்கலம் செல்லும் சாலையின் ஓரத்தில் முட்புதரில் நேற்று ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோஷ்டியூர் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன்(வயது 50), தச்சுத்தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது.
விசாரணை
இதனையடுத்து போலீசார், ஜெயகாந்தன் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெயகாந்தன் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.