கன்னியாகுமரி
சுசீந்திரம் அருகே தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|சுசீந்திரம் அருகே மகன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே மகன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டதால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தச்சு தொழிலாளி
சுசீந்திரம் அருகே உள்ள கற்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 69), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராமலெட்சுமி. இவர்களின் மகன் இசக்கிமுத்து (43) இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகன் நோயால் பாதிக்கப்பட்டதால் முத்துசாமி மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முத்துசாமி விஷத்தை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராமலெட்சுமி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகன் நோயால் பாதிக்கப்பட்டதால் தச்சுதொழிலாளி தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு வந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.