< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் பரிதாபம்:  தச்சு தொழிலாளி, ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் பரிதாபம்: தச்சு தொழிலாளி, ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

தினத்தந்தி
|
18 July 2022 7:20 PM IST

தூத்துக்குடியில் கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்

தூத்துக்குடியில் கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தச்சு தொழிலாளி

தூத்துக்குடி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 46). தச்சு தொழிலாளி. இவர் தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியில் சொந்தமாக பட்டறை வைத்து, தச்சு தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து சென்றவர், பட்டறையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தாராம்.

இந்த நிலையில் செல்வம் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மீளவிட்டான் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு தண்டவாளத்தின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த ரெயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

கடன் சுமை

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும், தான் செய்த தச்சு வேலைக்கு முறையாக பணம் கிடைக்காததாலும் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்