< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கர்நாடக மது விற்றவர் சிக்கினார்
|7 Sept 2023 6:20 AM IST
கர்நாடக மது விற்றவர் சிக்கினார்.
தாளவாடி
தாளவாடி அடுத்த சிக்கள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும், தான் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு ஓடினார். போலீசார் பையை திறந்து பார்த்தபோது அதில் கர்நாடக மது பாக்கெட்டுகள் இருந்தன. உடனே போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். விசாரணையில் அவர் சிக்கள்ளி கிராமத்தை சேர்ந்த சையத் இப்ராஹிம் (வயது 70) என்பதும், அந்த பகுதியில் நின்றுகொண்டு கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சையத் இப்ராகிம்மை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.