சேலம்
சேலத்தில் ஓட்டல் அதிபரின் கார் கடத்தல்போலீசார் விசாரணை
|சேலத்தில் வடமாநில ஓட்டல் அதிபரின் காரை கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலத்தில் வடமாநில ஓட்டல் அதிபரின் காரை கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் கடத்தல்
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் பிரத்திதான் பகுதியை சேர்ந்தவர் சர்தார்கான் (வயது 34). இவர் அங்கு ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். ஓட்டல் உரிமையாளரான இவர் சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தாபா ஓட்டல்கள் வைத்து நடத்த முடிவு செய்து உள்ளார். இதற்கு இடம் பார்ப்பதற்காக அவர் காரில் சேலம் வந்தார்.
இந்தநிலையில் சேலத்தில் சில இடங்களை பார்த்த பின்னர் அவர் காரில் கோவைக்கு சென்று கொண்டு இருந்தார். நெய்காரப்பட்டி அருகே சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நடந்து சென்றார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் காரை கடத்தி சென்றனர்.
தீவிர விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சர்தார்கான் சத்தம் போட்டு உள்ளார். இருப்பினும் மர்ம நபர்கள் காரை வேகமாக ஓட்டிச்சென்று விட்டனர். இது குறித்து அவர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில ஓட்டல் அதிபரின் கார் கடத்தப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.