சென்னை
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்ததில் கடும் போக்குவரத்து நெரிசல்
|பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சரக்கு வேன் கவிழ்ந்ததில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லியில் வீட்டை காலி செய்து விட்டு நேற்று வீட்டு உபயோக பொருட்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, பூந்தமல்லி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த டிரைவர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாலை நேரத்தில் சாலையின் நடுவே சரக்கு வாகனம் கவிழ்ந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.