< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
|26 Feb 2024 9:24 AM IST
விபத்தில் காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்னதாக வந்தவாசியில் இருந்து சென்னைக்கு பால் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.