< Back
மாநில செய்திகள்
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; பெண் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; பெண் சாவு

தினத்தந்தி
|
16 Oct 2023 11:27 PM IST

சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே மிரட்டுநிலை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 51). இவரது மனைவி ராஜகுமாரி (46). சம்பவத்தன்று ராஜகுமாரி மிரட்டுநிலையில் இருந்து தாஞ்சூர் கிராமத்திற்கு வயல் வேலைக்காக சரக்கு வேனில் ஏறி சென்று கொண்டிருந்தார். ஒணாங்குடி அருகே வந்த போது, சரக்கு வேன் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ராஜகுமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்