< Back
மாநில செய்திகள்
பஸ் மீது சரக்கு வேன் மோதல்; ஒருவர் பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பஸ் மீது சரக்கு வேன் மோதல்; ஒருவர் பலி

தினத்தந்தி
|
4 Oct 2023 11:15 PM IST

பஸ் மீது சரக்கு வேன் மோதலில் ஒருவர் பலியானார்.

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கந்தர்வகோட்டை அருகே தெத்துவாசல்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ் டிரைவர் பயணிகளை இறக்கி விட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புதுக்கோட்டை பாலநகர் பகுதியை சேர்ந்த முத்து மகன் அய்யப்பன் (வயது 25) என்பவர் ஓட்டிவந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக தனியார் பஸ் பின்னால் மோதியது. இதில் சரக்கு வேனில் வந்த புதுக்கோட்டை ஆட்டாங்குடி தண்டலை பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் பாண்டியன் (46) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இதில் படுகாயமடைந்த அய்யப்பனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியன் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்