< Back
மாநில செய்திகள்
கோவில் வளாகத்தில் அட்டைபெட்டிக்குள் பதுங்கிய மலைப்பாம்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

கோவில் வளாகத்தில் அட்டைபெட்டிக்குள் பதுங்கிய மலைப்பாம்பு

தினத்தந்தி
|
25 Oct 2023 2:19 AM IST

கோவில் வளாகத்தில் அட்டை பெட்டிக்குள் மலைப்பாம்பு பதுங்கி இருந்தது.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் தாணிப்பாறையில் சர்வேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு அட்டைப்பெட்டியில் சென்று மலைப்பாம்பு பதுங்கி சுருண்டு கிடந்தது. இதனை கண்டு கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த மலைப்பாம்பு தானாக வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் மலைப்பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும். எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்