திருப்பூர்
தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை
|தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் கிராமத்தில் ஊர்ப்புற நூலகம் உள்ளது. இங்கு நூலக நண்பர்கள் திட்டத்தின் கீழ் பணியாற்ற உள்ள தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல்களை எடுத்துச் செல்லும் வகையில் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார். தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச்சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கும் பணியை மேற்கொள்வார்கள். இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்து உள்ளனர்.
இவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது. இதில் நூலகர் உள்ளிட்ட வாசகர்கள் கலந்து கொண்டனர்.