< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருட்டு: போலீசார் வலைவீச்சு
|2 Dec 2022 12:54 AM IST
கார் கண்ணாடியை உடைத்து மடிக்கணினி திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று கரூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு தனது காைர நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பாா்த்தபோது, காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து அதில் இருந்த மடிக்கணினியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.