< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் விபத்து - வீரர் பலி
|8 Jan 2023 7:52 PM IST
சென்னை அருகே நடைபெற்ற கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் வீரர் உயிரிழந்தார்.
சென்னை,
சென்னையை அடுத்து இருங்காட்டுக் கோட்டையில் கார் பந்தைய மைதானம் உள்ளது. இங்கு கார் பந்தய போட்டி இன்று நடந்தது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குமார்(வயது59) என்பவர் கலந்து கொண்டார். போட்டியின் போது குமாரின் கார் விபத்துக்கு உள்ளனது. இதில் அவரின் கார் பலத்த சேதமடைந்தது.
உடனடியாக வீரர் குமார் காரில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.