< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்தது - மருத்துவ கல்லூரி மாணவி உயிர் தப்பினார்
|28 Jan 2023 12:17 PM IST
தியாகராயநகர் மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மருத்துவ கல்லூரி மாணவி அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் வர்ஷு. இவர், சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இவர், தினமும் காரில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். நேற்று காலையிலும் வழக்கம் போல மாணவி வர்ஷு காரில் கல்லூரிக்கு சென்றார். தியாகராயர் நகர் ஜி.என்.செட்டி ரோடு மேம்பாலத்தில் கார் அதிவேகமாக வந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்ற கார் தலைகீழாக கவிழ்ந்தது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் மாணவி வர்ஷு அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் பாண்டி பஜார் புலனாய்வு போலீசார் விரைந்து சென்று மேம்பாலத்தில் கவிழ்ந்து கிடந்த காரை அகற்றினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.