ராமநாதபுரம்
பரமக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் படுகாயம்...!
|பரமக்குடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் விஜயபுரியை சேர்ந்தவர் சங்கர்(வயது 60). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 11 பேர் காரில் ராமேஸ்வரம் சென்றனர்.
பரமக்குடி அருகே கமுதக்குடி கிராமத்தின் சாலையில் கார் வரும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியது. பின்னர், சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் காருக்குள் இருந்த பவன் கல்யாண்(25), மேதாஜ்( 6 ), ராஜம்மாள்(43), தேதிப்யா(7), மோனிகா(20), காவியா(35), லட்சுமி(50) சங்கரய்யா(55) மற்றும் கார் டிரைவர் ரமேஷ் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் காருக்குள் இருந்தவர்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது இவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
விபத்து இதுகுறித்து சங்கரய்யா கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.