< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து - கேரளாவைச் சேர்ந்த தம்பதி உயிரிழப்பு
|8 Dec 2023 9:41 AM IST
ஸ்ரீரங்கம்-சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் பாலத்தில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
திருச்சி,
திருச்சி அருகே ஸ்ரீரங்கம்-சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் பாலத்தில் வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் 19-வது மதகு அருகே தடுப்புக்கட்டையை உடைத்துக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த தம்பதி உயிரிழந்தனர்.
உயிரிழந்த நபர் கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.