< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
நத்தம் அருகே தலைகுப்புற கவிழ்ந்த கார்
|21 May 2023 2:30 AM IST
நத்தம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
நெல்லையில் இருந்து திருச்சி நோக்கி, மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் கார் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த கார், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டி புறவழிச்சாலையில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், விபத்தில் காரில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.