< Back
மாநில செய்திகள்
கார் கவிழ்ந்து விபத்து
ஈரோடு
மாநில செய்திகள்

கார் கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
2 July 2023 2:42 AM IST

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பவானிசாகர்

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்கள் அணில் குமார் (வயது 29), அணில் (30). இவர்கள் நேற்று காலை மைசூருவில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். காரை சீனிவாஸ் (29) என்பவர் ஓட்டினார். மேட்டுப்பாளையம் ரோட்டில் பவானிசாகர் அருகே உள்ள அய்யன் சாலை என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக கார் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சீனிவாஸ், அணில்குமார், அணில் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

இந்த விபத்து குறித்து பவானிசாகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்