< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
|11 Jan 2023 2:12 AM IST
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
தக்கலை:
தக்கலை அருகே உள்ள பிலாங்காலைைய சேர்ந்தவர் சோனி (வயது40), தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் திங்கள்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அழகியமண்டபத்தை அடுத்துள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு அதே வேகத்தில் சாலையோரம் நின்ற ஆட்டோ மீதும் மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த சோனி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் கார் மோதியதில் ஆட்டோவும் சேதம் அடைந்தது. இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.