< Back
மாநில செய்திகள்
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்
தேனி
மாநில செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
18 Aug 2023 4:00 AM IST

கொடைக்கானல் மலைப்பாதையில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் ராணி (31). உறவினர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளங்கியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டுவிற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாண்டியராஜன் ஓட்டினார்.

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் டம் டம் பாறை அருகே சென்றபோது, எதிரே மதுரையில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்ற கார், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் நிலை தவறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பாண்டியராஜன், ராணி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் கார் டிரைவரான கவிராஜ் (38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்