< Back
மாநில செய்திகள்
கோபி அருகேகார்-மொபட் மோதல்; வியாபாரி பலி
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி அருகேகார்-மொபட் மோதல்; வியாபாரி பலி

தினத்தந்தி
|
18 July 2023 4:23 AM IST

கோபி அருகே கார்-மொபட் மோதிக்கொண்ட விபத்தில் வியாபாரி பலியானாா்

கோபி அருகே உள்ள கூகலூர் கஸ்தூரிபாய் வீதியைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 59). இவர் ஊர், ஊராக சென்று மொபட்டில் பால் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் காளியப்பன் நேற்று முன்தினம் இரவு அந்தியூர் கோபி ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த காரும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காளியப்பன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே காளியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சவண்டப்பூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்