< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதல்; 2 பேர் பலி
|4 March 2023 1:53 PM IST
மதுராந்தகம் அருகே கார் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் வினோ பாரதி (வயது 36). இவர் அதே பகுதியில் கியாஸ் ஏஜென்சியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அலுவலக வேலையின் காரணமாக வினோ பாரதி தனது வீட்டின் அருகே உள்ள மணிரத்தினம் (33) என்பவரை கார் டிரைவராக கொண்டு தனது காரில் இருவரும் சென்னை சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுமாறி சென்று எதிரே வந்த டேங்கர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணிரத்தினம் மற்றும் வினோ பாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.