< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவள்ளூரில் கார் - லாரி மோதி விபத்து.. கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி
|11 Aug 2024 8:46 PM IST
உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
திருவள்ளூர்,
சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் 7 பேர், ஆந்திராவுக்கு காரில் சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் கல்லூரி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ராமஞ்சேரி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 மாணவர்கள் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. விடுமுறை தினம் என்பதால் மாணவர்கள் காரில் ஆந்திரா சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.