< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மண்ணிவாக்கத்தில் கார்-லாரி மோதல்; பெண் பலி
|8 March 2023 2:26 PM IST
மண்ணிவாக்கத்தில் கார்-லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனா (வயது 41), இவர் நேற்று முன்தினம் இரவு மண்ணிவாக்கம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை பாலாஜி (வயது 30) ஓட்டி சென்றார். மண்ணிவாக்கம் மேம்பாலம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற லாரியில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஜமுனா, டிரைவர் பாலாஜி இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது ஜமுனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.