தஞ்சாவூர்
மரத்தில் கார் மோதியது; 5 பேர் படுகாயம்
|கபிஸ்தலம் அருகே மரத்தில் கார் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்தது.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே மரத்தில் கார் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்தது.
கோவிலுக்கு சென்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியம்பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது39). இவர் தனது மனைவி ஷீலா(30) மற்றும் குடும்பத்தினர் அன்பழகன்( 65), செல்வராணி(55) ஆகியோருடன் காரில் மயிலாடுதுறையில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றாா். காரை டிரைவர் உதயகுமார் ஓட்டினார்.திருச்செந்தூாில் சாமி தரிசனம் செய்த பின் அவர்கள் அங்கிருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு காரில் வந்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் மெயின் ரோட்டில் கருப்பூர் அருகில் இவர்களின் காா் வந்த போது எதிர்பாராத விதமாக நாய் சாலையின் குறுக்கே வந்தது.
5 பேர் படுகாயம்
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில கார் டிரைவர் உள்பட காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.