< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம்
|10 April 2023 12:15 AM IST
கோதண்டராமசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சாமி வீதி உலா காட்சியும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோதண்டராமர், லட்சுமணர், சீதா, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயருடன் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.