< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
கஞ்சா செடி வளர்த்த கார் டிரைவர் கைது
|20 April 2023 2:32 PM IST
கஞ்சா செடி வளர்த்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் பல்லவர்மேடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர், அப்போது வீட்டுக்கள் பிளாஸ்டிக் கேனில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். இது தொடர்பாக கண்ணுசாமியை போலீசார் கைது செய்தனர்.