< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
போரூரில் மரம் சாய்ந்ததில் கார் சேதம்
|29 Jun 2023 2:39 PM IST
போரூரில் மரம் சாய்ந்ததில் வீட்டின் அருகே இருந்த கார் சேதம் அடைந்தது.
சென்னை போரூர் ஆபீசர்ஸ் காலனி பகுதியில் வீட்டின் அருகே இருந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து, அருகில் நிறுத்தி இருந்த கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மரக்கிளை விழுந்ததில் அங்கிருந்த மின்வயர்களும் அறுந்து விழுந்தன.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம் பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் கார் மீது விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்வயர்களை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் மின் தடை ஏற்பட்டது. மரம் விழுந்தபோது காருக்கு உள்ளேயும், அந்த பகுதியிலும் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.