< Back
மாநில செய்திகள்
மரம் முறிந்து விழுந்து போலீஸ்காரர் கார் சேதம்
சிவகங்கை
மாநில செய்திகள்

மரம் முறிந்து விழுந்து போலீஸ்காரர் கார் சேதம்

தினத்தந்தி
|
23 July 2022 11:16 PM IST

மரம் முறிந்து விழுந்து போலீஸ்காரர் கார் சேதம் அடைந்தது.


சிவகங்கை நகரில் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. மாலையில் பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இந்த மழையினால் நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் நகரில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் இருந்த வேப்பமரம் ஒன்று வேரோடு சாய்ந்து அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தாஸ் மோகன் என்ற ஆயுதப்படை போலீஸ்காரருக்கு சொந்தமான காரின் மீது விழுந்தது. இதில் கார் முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் ஆயுதப்படை குடியிருப்பில் இருந்த 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் குடியிருப்பு பகுதி இருளில் மூழ்கியது. இதையடுத்து மின் வாரியத்தினர் உடனடியாக அந்த மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து மின் இணைப்பை சரி செய்தனர்.மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை 8, மானாமதுரை 36, இளையான்குடி 73, திருப்புவனம் 5.03, தேவகோட்டை 16.40, காரைக்குடி 11, திருப்பத்தூர் 7, காளையார் கோவில் 8.80, சிங்கம்புணரி 2.40.


மேலும் செய்திகள்