< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மரத்தில் கார் மோதி டிரைவர் காயம்
|3 July 2023 1:15 AM IST
வேடசந்தூர் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் காயம் அடைந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் தனது நண்பரை சந்திப்பதற்காக ஒரு காரில் வடமதுரை சென்றார். பின்னர் நேற்று மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை வெங்கடேஷ் ஓட்டினார். வேடசந்தூர்-வடமதுரை ரோட்டில் மண்டபம் புதூர் என்னுமிடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் காயம் அடைந்த வெங்கடேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.