கூத்தாநல்லூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதல் - 2 பேர் பலி
|கூத்தாநல்லூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கூத்தாநல்லூர்,
நாகப்பட்டினம் மாவட்டம், பெருங்கடம்பனூரைச் சேர்ந்த குடும்பத்தினர், மதுக்கூர் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு 12 மணியளவில், கூத்தாநல்லூர் வழியாக பெரும்கடம்பனூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி பாலம் எதிரில் சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது.
இதனால், பலத்த சேதம் அடைந்த காருக்குள் இடிபாடுகளில் சிக்கி பெரும்கடம்பனூரை சேர்ந்த சின்னையன் மனைவி சந்திரா (70), ராமர் மகன் கணபதி (42) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த காரை ஓட்டிச் சென்ற ராமச்சந்திரன் (37) மற்றும் விஜயலட்சுமி (30),சந்தோஷ் (16),குழந்தைகள் ஜெய்ஹரீஸ் (8),சாதனா (4) ஆகிய 5 நேர் பலத்த காயம் அடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.