< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: இசை கல்லூரி மாணவர் பலி - நண்பர் படுகாயம்
சென்னை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: இசை கல்லூரி மாணவர் பலி - நண்பர் படுகாயம்

தினத்தந்தி
|
20 May 2022 9:36 AM IST

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இசை கல்லூரி மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் நிமிஷ் நாராயணன் மாசரே (வயது 23). அதே போல் பெங்களூருவைச் சேர்ந்தவர் வச்சு சிவாஸ்டவ் (22). நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள இசை கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தங்களின் மற்றொரு நண்பரை பார்க்க சென்றனர். கோயம்பேடு 100 அடி சாலையில் சென்ற போது இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த கார், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த நிமிஷ் நாராயணன் மாசரே , சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அவரது நண்பரான வச்சு சிவாஸ்டவ், அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பலியான நிமிஷ் நாராயணன் மாசரே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரான திருவேற்காட்டை சேர்ந்த நந்தகுமார் (26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்