< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சாலை மையத்தடுப்பில் கார் மோதல்; தம்பதி உள்பட 5 பேர் படுகாயம்
|6 Jun 2022 1:56 AM IST
சாலை மையத்தடுப்பில் கார் மோதியதில் தம்பதி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி:
சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன்(வயது 47). சம்பவத்தன்று இவர் தனது மனைவி ஜெயா(39), மகன் கிஷோர்(13), மகள் சண்முகபிரியா(11) ஆகியோருடன் காரில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை ராணிப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ஓட்டினார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணி அளவில் அந்த கார் வந்தபோது, பால்பண்ணை பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மையத்தடுப்பில் மோதியது. இதில் கார் டிரைவர் கண்ணன் மற்றும் காரில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.